திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 பேர் சிக்கினர்


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 9:31 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கஞ்சா விற்கப்படுவதாக பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். அவர்களில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பழவேற்காடு பகுதியை சேர்ந்த தமிம்ஷா என்கிற உல்லாஸ் (வயது 24), பயாஸ் (23), ஷேக்தாவூத் (26), நந்தகுமார் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அதேபோல் சோழவரம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த உதயகுமார் (23), தீபன் (22), பிரபாகர் (25) ஆகியோரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் தொடர்ந்து கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் மேற்கண்ட இடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர், எளாவூர் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 21) என்பது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட 24 கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story