ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 67 பவுன் நகைகள் கொள்ளை


ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 67 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 22 Sept 2019 3:45 AM IST (Updated: 22 Sept 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 67 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 45). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 67 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே வீட்டிற்கு வந்த கிறிஸ்டோபர் வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story