குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் ரூ.8¼ கோடிக்கு விற்பனை
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் ரூ.8¼ கோடிக்கு விற்பனையானது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை எஸ்டேட் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு நடத்தும் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெறுகின்றன. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கிறார்கள். விற்பனை எண் 38-க்கான ஏலம் கடந்த 19, 20-ந் தேதி நடைபெற்றது.
ஏலத்திற்கு மொத்தம் 11 லட்சத்து 69 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 8 லட்சத்து ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 68 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 84 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. தேயிலை தூள் ரூ.8 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கடந்த வாரத்தைவிட ஒரு ரூபாய் விலை உயர்ந்தது. இதில் சி.டி.சி. தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.270-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் ரூ.260-க்கும் ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை ஒரு கிலோவுக்கு ரூ.64-ல் இருந்து ரூ.76 வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் ஒரு கிலோவுக்கு ரூ.112-ல் இருந்து ரூ.122 வரை வரையிலும் ஏலம் போனது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை ஒரு கிலோவுக்கு ரூ.72-ல் இருந்து ரூ.77 வரையிலும், விலை உயர்ந்த தேயிலை தூள் ஒரு கிலோவுக்கு ரூ.114-ல் இருந்து ரூ.125 வரை ஏலம்போனது.
விற்பனை எண் 39-க்கான ஏலம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடக்கிறது.
Related Tags :
Next Story