மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 7:37 PM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டல் நில மீட்பு போராட்டத்திற்கான பேரவை கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது.

அரியலூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டல் நில மீட்பு போராட்டத்திற்கான பேரவை கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதற்கு கட்சியின் ஆலத்தூர் வட்ட செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு பேசியதாவது:- ஒரு தனியார் குழுமமும், இந்திய அரசின் பெருவணிக துறையும் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக 3 ஆயிரம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களை கையகப்படுத்தினர். மேலும் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினர்.

ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்குவதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை. இதனால் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து கட்சிகள், அனைத்து விவசாய சங்க, தொழிற்சங்க கூட்டமைப்புகள், நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளும் இணைந்து வருகிற 30-ந் தேதி திருமாந்துறையில் நில மீட்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கலந்து கொள்கிறார்.இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக வருகிற 27, 28, 29-ந் தேதிகளில் ஆட்டோ பிரசாரம் செய்ய உள்ளப்படவுள்ளது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமே‌‌ஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story