குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ராயனூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ராயனூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2019 11:00 PM GMT (Updated: 22 Sep 2019 7:54 PM GMT)

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ராயனூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்,

கரூர் அருகேயுள்ள ராயனூர் அன்புநகர், எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பல்வேறு தெருக்களில் அலைந்து திரிந்து பிடித்து வர வேண்டியுள்ளதால், காலையில் சீக்கிரமாக வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை ராயனூர் மெயின்ரோடு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் தாந்தோன்றிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரியா, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story