வெள்ளியணை மாரியம்மன் கோவில் சுற்றுப்பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


வெள்ளியணை மாரியம்மன் கோவில் சுற்றுப்பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:30 PM GMT (Updated: 22 Sep 2019 7:59 PM GMT)

மாரியம்மன் கோவில் சுற்றுப்பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெள்ளியணை கிராம மக்கள் ஒன்று கூடி சுற்றுப்பொங்கல் வைத்து விழா நடத்துவது வழக்கம். அதன்படி அதற்கான பணிகளை கிராமமக்கள் மேற்கொண்டனர்.

இதையடுத்து முதல் நிகழ்வாக நேற்று காலை செல்லாண்டிபட்டி, திருமுடிகவுண்டனூர், குமாரபாளையம்,வேலாயுதம்பாளையம், கருவாட்டியூர், முத்தக்காபட்டி, திருமலைநாதன்பட்டி, ஓந்தாம்பட்டி, வெங்கடாபுரம், மேட்டுப்பட்டி, பச்சபட்டி, மாமரத்துப்பட்டி,லட்சுமிபுரம், தேவகவுண்டனூர், ஜல்லிபட்டி, வழியாம்புதூர், தாளியாபட்டி, வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதி ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளியணையில் பெருமாள்கோவிலில் ஒன்று கூடினர்.

பால்குட ஊர்வலம்

பின்னர் அங்கிருந்து தாரை தப்பட்டை முழங்க, வானவேடிக்கை மற்றும் தேவராட்டத்துடன் பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பலவண்ண மலர்களால் அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) அம்மனுக்கு கிராம மக்கள் கோவிலில் ஒன்றுகூடி சுற்றுப்பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

Next Story