கோவை விளாங்குறிச்சியில், தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கோவை விளாங்குறிச்சியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பீளமேடு,
கோவை சரவணம்பட்டியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் சேஷாத்ரி என்பவருக்கு சொந்தமான கேட்டரிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். நேற்று காலை நிறுவனத்தின் முதல் மாடியில்உள்ள சமையல் கூடத்தில் பணியாளர்கள் சமையல் செய்து கொண்டு இருந்தனர். இரண்டாம் தளத்தின் ஒருபகுதி குடோனாகவும், மற்றொரு பகுதியில் பணியாளர்கள் தங்கும் பகுதியாகவும் இருந்து வந்தது. இதில் 12 பேர் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8.45 மணியளவில் இரண்டாம் தளத்தில் உள்ள மின்இணைப்பு பெட்டியில் திடீரென தீபிடித்தது.அந்த தீமளமளவென பரவிஅங்கு வைக்கப்பட்டிருந்த டேபிள்கள், பாத்திரங்கள் மற்றும் கிரைண்டர், மிக்சி உள்ளிட்டமின்சாதனபொருட்கள் எரிந்து நாசமானது.
தீபிடித்த சிறிது நேரம் கழித்தே முதல் தளத்தில் இருந்தவர்களுக்கும், அறையில் தங்கி இருந்தவர்களுக்கும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு இருந்த தீ அணைக்கும் கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அணைக்க முடியாமல் போனது. இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,மாவட்ட தீயணைப்புஉதவி அலுவலர்தவமணி தலைமையில் கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் கணேஷ் குமார்,கோவை தெற்குநிலைய அலுவலர் அல்லிமுத்து, பீளமேடு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீப்பிடித்த தளத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் மற்றும் உரிமையாளர் சேஷாத்ரி உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். தீ விபத்தில் சுமார்ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.இந்த தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம்காரணமாகஅந்த பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story