கோவையில் இருந்து ‘பப்ஜி’ விளையாட மைசூரு சென்ற மற்றொரு மாணவனும் மீட்பு - அன்னூரில் குளிரில் நடுங்கியபடி படுத்து கிடந்தான்
கோவையில் இருந்து ‘பப்ஜி’ விளையாட மைசூருசென்ற மற்றொரு மாணவனும் மீட்கப்பட்டான். அன்னூரில் குளிரில் நடுங்கியபடி படுத்து கிடந்தபோது போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
சூலூர்,
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் விவேக் சிங் மற்றும் பல்தேவ். இவர்களது மகன்களான கேதுன்மற்றும் வருண் ஆகியோர் சூலூர் அருகே உள்ள கேந்திரவித்யாலயா பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவர்களது பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் மாயமான சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில், காணாமல் போன வருண் நேற்று முன்தினம்வீட்டுக்கு திரும்பிவந்துவிட்டான்.கேதுன்வரவில்லை. போலீசாரின் விசாரணையில் அவர்கள் முதலில் கோவையில் இருந்துசத்தியமங்கலத்திற்கு சைக்கிளிலும், பின்னர் அங்கிருந்து பஸ் மூலம்மைசூருக்கு சென்றனர். அங்கு அவர்கள் ‘பப்ஜி’ ஆன்லைன் கேம் விளையாடிவிட்டு அங்கிருந்து மீண்டும் சத்தியமங்கலம் திரும்பி வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் வீடு திரும்பாத கேதுனை கண்டுபிடிக்க, சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உத்தரவின்பேரில், ஏட்டு ஆறுமுகம் மற்றும் 5 விமானப்படை ஊழியர்கள் சத்தியமங்கலத்துக்கு நேற்று விரைந்தனர். பின்னர் அவர்கள் கேதுனைமீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம்குறித்து போலீசார் கூறியதாவது:-
சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும்அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மாயமான சிறுவனை தேடினோம். ஆனால் அவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனிடையே, அன்னூர் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்அப்பகுதிக்குசென்று பல்வேறு இடங்களில் தேடினோம். அப்போது அன்னூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முன்புகேதுனின்சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனேஅந்த கட்டிடத்தின்முதல்மாடிக்கு சென்றுபார்த்தபோது, தரையில் அவன் குளிரில் நடுங்கியவாறுபடுத்து தூங்கி கொண்டு இருந்தான். உடனே அவனை எழுப்பி, வரும் வழியில் சாப்பாடு கொடுத்து,அவனதுபெற்றோரிடம் ஒப்படைத்தோம்.
சிறுவர்கள் 2 பேரும் முதல் நாள் வீட்டில் இருந்து கிளம்பும்போதுரூ.4 ஆயிரத்தைஎடுத்து சென்றுள்ளனர்.அதை கடந்த2நாட்களாக செலவுசெய்து உள்ளனர். நேற்று சிறுவனை மீட்கும்போது அவனிடம்ரூ.200 மட்டுமே இருந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story