நயினார்கோவில் பகுதியில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஆய்வு


நயினார்கோவில் பகுதியில் குடிமராமத்து பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:30 PM GMT (Updated: 22 Sep 2019 10:32 PM GMT)

நயினார்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட காரடர்ந்தகுடி, பனிதவயல் உள்ளிட்ட கிராமங்களில் கண்மாய் மற்றும் கால்வாய்களில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவரிடம் நாகநாதசுவாமி கோவிலின் வாசுகி தீர்த்தத்திற்கு தண்ணீர் வரும் 6 வழிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றில் கழிவுநீர் குழாய் களை இணைத்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பரமக்குடி தாசில்தார் சரவணன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு, பொறியாளர் லதா, நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜகோபால், காரடர்ந்தகுடி விவசாய சங்க தலைவர் லட்சுமி, பனிதவயல் விவசாய சங்க தலைவர் ரஜினிகாந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story