பொதுமக்கள் தாங்களாகவே குப்பைகளை தரம்பிரித்து கொடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் - நீதிபதி பி.ஜோதிமணி வேண்டுகோள்
பொதுமக்கள் தாங்களாகவே குப்பைகளை தரம்பிரித்து கொடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும் என மாநில திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி வேண்டுகோள் விடுத்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள், ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மாநில திடக்கழிவு மேலாண்மை திட்ட கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி ஆய்வு செய்தார்.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபுர்ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கருப்பையாராஜா, சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
தாம்பரம் கன்னடப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நடைபெறும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் நீதிபதி பி.ஜோதிமணி கூறியதாவது:-
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பிறகு சுற்றுச்சூழலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஊட்டியில் பிளாஸ்டிக் தடையை மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தற்போது குப்பைகளை தரம்பிரித்து அதில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஈரோட்டில் குப்பைகளை தரம் பிரித்து அதன்மூலம் செங்கல் தயாரிக்கிறார்கள். இதுமற்ற செங்கல்களைப்போல தரமாக உள்ளது. குப்பைகளை உரமாக்க முடியும்.
குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து கொடுப்பது தமிழகத்தில் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. இவற்றை நகராட்சிகள் தொடர வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே குப்பைகளை தரம்பிரித்து கொடுத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். தற்போது நாம் அனுபவிக்கின்ற இயற்கையை, நம் சந்ததிக்கு கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதை செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி தண்டனை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story