கூடலூரில், சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
கூடலூரில் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
கூடலூர்,
கூடலூர் நகரில் சுமார் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஆட்டோக்களின் நகரம் என்ற பெருமையை கொண்டு திகழ்கிறது. இங்கு சாலையில் சிதறி கிடந்த ரூ. 45 ஆயிரத்தை நல்ல உள்ளம் படைத்த ஆட்டோ டிரைவர் எடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா அட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பயணிகளை அழைத்து கொண்டு செம்பாலாவில் இருந்து கூடலூருக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அப்போது அட்டி- செம்பாலா இடையே வந்த போது சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை கண்ட ஜாக்சன் உடனே ஆட்டோவை நிறுத்தினார்.
பின்னர் சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தார். அதில் ரூ.45 ஆயிரம் இருந்தது. பின்னர் தனது ஆட்டோவில் வந்த பயணிகளை கூடலூருக்கு ஜாக்சன் அழைத்து சென்று விட்டார்.
தொடர்ந்து ஜாக்சன் தனது சக ஆட்டோ டிரைவர்களான தமிழ், கண்ணதாசன், மொரி, சியாபு, ஜீவா ஆகியோருடன் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சத்தி ஆகியோரை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். பின்னர் சாலையில் கிடந்த ரூ.45 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் ஜாக்சன் ஒப்படைத்தார்.
இதனிடையே செம்பாலா பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சிகாமணி (49) என்பவர் கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு வரும் போது, தான் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் கீழே விழுந்து காணாமல் போய் விட்டதாக போலீ சாரிடம் தெரிவித்தார். அதில் உண்மை தன்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அந்த பணம் ஆட்டோ டிரைவர் ஜாக்சன் ைகயால் சிகாமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை யில் கிடந்த பணத்தை ஒப்ப டைத்த ஆட்டோ டிரைவரின் செயலை போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story