புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த 21-ந்தேதி (சனிக்கிழமை) அறிவித்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் புதுவை உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதேநேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட புதுவை அரசின் சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை ரெட்டியாரின் மகன் ஜெயக்குமார், காங்கிரஸ் பிரமுகர் ஏழுமலை என்ற காசிலிங்கம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, தொழிலதிபர் சேகர் ரெட்டியார் ஆகியோர் விருப்ப மனுக்களை காங்கிரஸ் துணைத்தலைவர்களான விநாயகமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரிடம் தாக்கல் செய்தனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் டிக்கெட் கேட்டு டாக்டர்கள் தியாகராஜன், ரங்கராஜன், வக்கீல்கள் அசோக்பாபு, கமலினி, தொழிலதிபர் கணேஷ், கல்வியாளர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.விடம் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

Related Tags :
Next Story