நாடாளுமன்ற தேர்தல் பணி: கார்களுக்கு வாடகை பணம் தரவில்லை உரிமையாளர்கள், கலெக்டரிடம் முறையீடு


நாடாளுமன்ற தேர்தல் பணி: கார்களுக்கு வாடகை பணம் தரவில்லை உரிமையாளர்கள், கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் பணியின்போது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு வாடகை பணம் தரவில்லை என அவற்றின் உரிமையாளர்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிக்கு 100-க்கும் மேற்பட்ட கார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. இந்த கார்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை வாடகை பணம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட கார்களின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் தங்களுக்கு உடனடியாக வாடகை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வாடகை பணம்

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் கார்களை வாடகைக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு இயக்கினோம். 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு வாடகை பணம் தரப்படவில்லை. எனவே எங்களால் வண்டிக்கு இன்சூரன்சு, எப்.சி. போன்றவற்றிற்கு பணம் கட்ட முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு வாடகை பணம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story