சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை: கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சித்தராமையா 1997-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக இருந்தபோது, மைசூரு விஜயநகரில் ஒரு வீடு கட்டினார். அருகில் இருந்த அரசு நிலத்தையும் சேர்த்து வீடு கட்டி, கடந்த 2003-ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
பெங்களூரு,
சித்தராமையா நில முறைகேடு செய்துவிட்டதாக கூறி இதுகுறித்து கங்கராஜ் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு விசாணைக்கு 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story