கர்நாடக ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் பதவி ஏற்பு
கர்நாடக ஐகோர்ட்டுக்கு 4 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
மூத்த வக்கீல்களான சிங்காபுரம் ராகவாச்சார் கிருஷ்ண குமார், அசோக் சுபாஷ் சந்திரா கினகி, சுராஷ் கோவிந்தராஜ் மற்றும் சச்சின் சங்கர் மகதும் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் 4 பேரும் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
ராஜ்பவனில் நடந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா 4 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்- மந்திரி கோவிந்த் கார்ஜோள், மந்திரிகளான மாதுசாமி, பசவராஜ் பொம்மை, லோக்அயுக்தா நீதிபதி விஸ்வநாத் செட்டி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஒகா, ஐகோர்ட்டு நீதிபதிகள், அரசு ஆள்சேர்ப்பு மற்றும் நிர்வாக புனரமைப்பு செயலாளர் செல்வகுமார், கவர்னர் சிறப்பு செயலாளர் ரமேஷ், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற 4 பேருக்கும் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஒகா உள்ளிட்டவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
Related Tags :
Next Story