செங்கல்பட்டு, ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை


செங்கல்பட்டு, ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 25 Sept 2019 3:30 AM IST (Updated: 24 Sept 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரியை சேர்ந்தவர் திலிப் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயதான 3 மாணவர்கள் டியூஷன் முடித்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் வந்த தெரு குறுகலாக இருந்ததால் ஒரு மேட்டின் மீது ஏறும் போது முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது.

இதனால் ஆட்டோ டிரைவர் திலிப், மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். மாணவர்கள் திலிப்பை அடித்து உதைத்தனர். திலிப்பும் அவர்களை தாக்கினார். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

ஆட்டோ டிரைவர் திலிப் சோர்வுடன் காணப்பட்டார். அத்துடன் அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திலிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் திலிப்பின் உறவினர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி கொலை வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story