தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசுக்கூப்பன் கேட்டு கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசுக்கூப்பன் கேட்டு கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2019 10:30 PM GMT (Updated: 24 Sep 2019 6:29 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

கட்டிட தொழிலாளர் நலவாரியத்தை முடக்கக்கூடாது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான திட்டங்களை அமல்படுத்த வேண்டும், செஸ் வரியை 2 சதவீதமாக உயர்த்த வேண்டும், தீபாவளி பண்டிகைக்கான கூப்பனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுவை மாநில கட்டிடக்கலை தொழிலாளர்கள் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த தர்ணாவுக்கு கட்டிடக்கலை தொழிலாளர் சங்க தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

போராட்டத்தில் கட்டிடக்கலை தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஞானவேல், ஏ.ஐ.டி.யு.சி. துணைத்தலைவர் கலியபெருமாள், நளவேந்தன், தொகுதி செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story