கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இன்று தண்ணீர் திறப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இங்கு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஆந்திர மாநில அரசுடன் செய்துகொண்ட கிருஷ்ணா நதிநீர் திட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். இந்த தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடையும். அங்கிருந்து, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 2.2 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டது. மார்ச் மாதம் 26-ந் தேதியுடன் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. 6 மாத காலமாக தண்ணீர் திறப்பு இல்லாமல் இருந்தது.
கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி வறண்டு காணப்பட்டது. ஏரியில் தாழ்வான பகுதியில் குட்டைகளில் மட்டும் 12.55 அடி தண்ணீர் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 19-ந் தேதி பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.
19-ந் தேதி நீர்மட்டம் 12.55 அடியாக பதிவாகி இருந்தது. நேற்று மதியம் 20.80 அடியாக உயர்ந்தது. அதாவது 4 நாட்களில் 8.25 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 66 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் 327 மில்லியன் கனஅடி தண்ண்ீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று மதியம் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரியை சென்றடைவதற்காக ரூ.24 லட்சம் செலவில் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்தன. கண்டலேறு அணையில் இருந்து திறக்க உள்ள தண்ணீர் 7 நாட்களில் பூண்டி ஏரியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா நதி கால்வாய் மற்றும் ஆந்திராவில் உள்ள அம்மபள்ளியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள கொசஸ்தலை ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி 8 டி.எம்.சி. தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற் பொறியாளர் கவுரிசங்கர், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலவர் கிருஷ்ணன் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story