சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற விவசாயி கைது


சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 24 Sep 2019 10:15 PM GMT (Updated: 24 Sep 2019 6:59 PM GMT)

துவரங்குறிச்சி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கல்லாமேடு அருகே உள்ள சின்னகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு(வயது 67). இவருடைய அண்ணன் பெருமாளின் மகன் கோபாலகிருஷ்ணன்(40). விவசாயி. சின்னக்கண்ணுவுக்கும், பெருமாளுக்கும் இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி தோட்டத்தில் இருந்த சின்னக்கண்ணுவிடம், கோபாலகிருஷ்ணன்(40) சொத்து பிரச்சினை சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், சின்னக்கண்ணுவை கையால் அடித்தார்.

கைது

இதில் சின்னக்கண்ணு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரட்டியபட்டியில் அத்தையை வாலிபர் அடித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. இந்நிலையில் சித்தப்பாவை வாலிபர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story