வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
வேப்பந்தட்டை ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சியில் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
வேப்பந்தட்டை,
வேப்பந்தட்டை ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சியில் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகள் பலப்படுத்துதல் திட்டத்தின் கீழ், எம்.ஜி.ஆர். நகர் கசிவு நீர் ஏரி, சின்ன ஏரி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மதேசம் கசிவு நீர் குட்டை உள்ளிட்ட ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார். பின்னர் அந்த பணிகளை விரைந்து முடிக்கவும், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் முழுவதும் ஏரியில் சேகரமாகும் வகையில் வரத்து வாய்க்காலை முழுமையாக சீரமைக்கவும், கரை மற்றும் ஏரியில் உள்ள தேவையற்ற முட்புதர்களை அகற்றி ஏரிக்கரைகளை பலப்படுத்தவும், ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது தமிழக அரசின் மூலம் கிராமப்புறங்களில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள்சீரமைக்கப்பட்டு மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை ஏரியில் சேகரிக்க முடியும். இதன்மூலம் கோடைக்காலங்களில் இப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதி பெரும் வகையிலும் வழிவகை செய்யப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

Related Tags :
Next Story