அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி இன்று முதல் தொடக்கம்
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டதில் பலர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக விரைவில் ரெயில்வே தேர்வு வாரியத்தால் (ஆர்.ஆர்.பி.) நடத்தப்படவுள்ள பல்வேறு பணி காலியிடங்களுக்கும், தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தர் முதலான வங்கி பணி காலியிடங்களுக்கும்போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக இவ்வலுவலகத்தின் சார்பில் இன்று (புதன் கிழமை) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தில் மாணவர்கள் பயில்வதற்கு ஏற்றவகையில் அமைதியான சூழல், காற்றோட்டமான இடவசதி மற்றும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்குமான புத்தகங்களுடன் நூலகமும் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி எழுத்து தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவு செய்து
எனவே, மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை இன்று முதல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கு, போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டல் மையத்தினை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story