‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு: தவறு செய்தவர்களை தூக்கில் போடலாம் எச்.ராஜா பேட்டி
‘நீட்‘ தேர்வில் ஆள் மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் கூட போடலாம் என்று தர்மபுரியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
தர்மபுரி,
பா.ஜனதா கட்சியின் சார்பில் தேச ஒற்றுமை பிரசாரம்- ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 மற்றும் 35-ஏ நீக்கம் குறித்த மக்கள் சந்திப்பு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் அழகு, சிவன், செல்லபாண்டியன், சரவணன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் அங்கு சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு இருந்தவரை அங்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் அங்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு கிடைத்து உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்ற நிலை இந்த சட்டப்பிரிவு நீக்கத்தின் மூலம் மாற்றப்பட்டு பெண்ணுரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
எதிரானவர்கள்
சமூக நீதியை பற்றி பேசும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள், வைகோ, திருமாவளவன் போன்றோர் 370-வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த வரிச்சலுகை மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் தொழில்துறையில் எழுச்சி பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை இருப்பது மிகவும் நன்மை அளிக்கும். ஒரே அடையாள அட்டை, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்களை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்களாக இருக்க முடியாது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்தி திணிப்பு கருத்துக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டம் வாபஸ், ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ், வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என நல்ல செய்திகள் மட்டும் வருகின்றன.
தூக்கில் கூட போடலாம்
‘நீட்‘ தேர்வுக்கும், ஆள்மாறாட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘நீட்‘ தேர்வில் ஆள் மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்களை தூக்கில் கூட போடலாம். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பு தனி மனிதருக்கு கிடைத்த வரவேற்பு அல்ல. இந்த நாட்டிற்கு கிடைத்த வரவேற்பு.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Related Tags :
Next Story