திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மக்களை திரட்டி போராட்டம் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
சிவகாசி,
சிவகாசி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய செங்கோட்டை பயணிகள் ரெயில் மூலம் வந்த மாணிக்கம்தாகூர் எம்.பி. ரெயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சமூக ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கோரிக்கைகள் குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி.யிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசி, திருத்தங்கல் ரெயில் நிலையங்கள் தூய்மையாக இருக்கிறது. அதிகாரிகளை பாராட்டுகிறேன். திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் போதிய கழிப்பறை மற்றும் மேற்கூரை வசதி இல்லை. திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை என்று பயணிகள் தெரிவித்தனர். அந்த ரெயில் திருத்தங்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது செங்கோட்டை-மதுரை இடையே 6 முறை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்படும். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். திருத்தங்கல் ரெயில் நிலையம் அருகில் அமைய உள்ள பாலத்தின் வடிவத்தை 3 முறை மாநில அரசு மாற்றி உள்ளது. இந்த பகுதியில் அமைய உள்ள பாலத்தை தடுக்க முயற்சி நடக்கிறது.
இந்தபகுதியில் ரெயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். திருத்தங்கல் பகுதியில் பாலப்பணி தொடங்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, மத்திய ரெயில்வே மந்திரி பதில் அளித்துள்ளார். அதில் பணிகளை தொடங்க நாங்கள் தயார் என்றும், மாநில அரசு தான் பாலத்தின் வடிவத்தை மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கூட இந்த பகுதியில் மாநில அரசு ஒரு ஆய்வை நடத்தி உள்ளது. இந்த பகுதியில் பாலம் அமைவதை ஏன் தடுக்க வேண்டும்? மக்களை திரட்டி பாலம் அமைய போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
பேட்டியின் போது காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story