தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த 3 பேர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 25 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொழுவபெட்டா வனப்பகுதியில் வன நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதன் பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வன ஊழியர்கள் தொழுவபெட்டா பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தை பைல் வனப்பகுதியில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சமன் செய்து விவசாயம் செய்யும் நோக்கத்தோடு ராகி விதை விதைத்து அப்பகுதியில் இருந்த செடி, கொடிகளை அகற்றி முட்புதர்களை வெட்டி சிலர் வேலி அமைத்து கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தொழுவபெட்டா கிராமத்தை சேர்ந்த மசீரப்பா ( வயது 55), முனியப்பா (55), முனிராஜ் (40) என்பது தெரிய வந்தது.

3 பேர் கைது

விசாரணையில் அவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்பதால் விவசாயம் செய்யும் நோக்கத்துடன் வன நிலத்தை ஆக்கிரமித்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

Next Story