காலாப்பட்டில் தொடரும் கொலைகள்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தல்
காலாப்பட்டில் தொடரும் கொலைகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காலாப்பட்டு தொகுதியில் தினம்தினம் தொடர் கொலைகள், வன்முறைகள், கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை என நடந்து வருகிறது. இதனால் தொகுதி மக்கள் நிம்மதியில்லாமல் தொடர்ந்து அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். தனியார் தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வன்முறையாக மாற்றினார்கள்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் கொலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து தற்போது ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள். அதிகாரப்போட்டியே இதுபோன்ற கொலைகள் நடப்பதற்கு காரணம்.
தனியார் தொழிற்சாலையில் காங்கிரஸ் சார்பில் 2 தொழிற்சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரே தொழிற்சாலையில் எதற்காக 2 தொழிற்சங்கங்கள் நடத்துகின்றனர். இந்த 2 கொலைகளிலும் முக்கிய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஜோசப் கொலையில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர்.
எனவே இந்த கொலைகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். காலாப்பட்டு தொகுதியில் எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதுபோன்று வன்முறையை ஏவி பதற்றமான சூழலில் வைத்திருக்க நினைக்கின்றனர். இதேபோக்கு இருந்தால் இன்னும் பல கொலைகள் இப்பகுதியில் நிகழுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஜோசப் கொலையில் சேர்க்கப்பட்டுள்ள அப்பாவிகளை விட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.
பேட்டியின்போது என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

Related Tags :
Next Story