சத்துணவு முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் எம்.பி. பேட்டி
சத்துணவு முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க இருப்பதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்ராஜ் எம்.பி. கூறினார்.
நாமக்கல்,
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல்லில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் வெங்கடாசலம், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ், கோழி வியாபாரிகள் சங்கம் சார்பில் செல்லப்பன், முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், தீவன மூலப்பொருட்கள் வியாபாரிகள் சங்கம் சார்பில் குணசேகரன், தீவன உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மேகநாதன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவதூறு செய்திகள்
இதில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முட்டைகளை கடனுக்கு வியாபாரிகளிடம் கொடுக்கிறோம். இதில் நமக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வருகிற 1-ந் தேதி முதல் முட்டை வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிகளிடம் மட்டுமே முட்டைகளை கொடுக்கவேண்டும். பண்ணையாளர்கள் யாரும் வாட்ஸ்-அப் மூலம் ஒரு சங்கத்தையோ அல்லது தனிநபரை பாதிக்கும் வகையில் அவதூறு செய்திகளை அனுப்பவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடுமையான நஷ்டம்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீவன உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. கடந்த 6, 7 மாதமாக பண்ணையாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கோழிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இத்தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவது, வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்வது, வங்கி கடனை ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்ய கேட்டுக்கொள்வது, வட்டி விகிதத்தை 4 சதவீதம் வரை குறைக்க கேட்பது குறித்து விவாதித்தோம்.
இனிவரும் காலங்களில் கோழி மற்றும் முட்டைகளை விலை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைப்பது என முடிவு செய்துள்ளோம். கோழித்தீவன மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க, வரும் காலங்களில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும்.
தனி மண்டலம்
வருகிற 26-ந் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்சினைகள், குளறுபடிகள் குறித்து எடுத்துக்கூற உள்ளோம். முட்டை ஏற்றுமதியை பொறுத்தவரை நாமக்கல்லை தனி மண்டலமாக மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தனி மண்டலமாக அறிவிக்கப்படும்போது இந்தியாவில் எந்த பகுதியில் பறவைக்காய்ச்சல் வந்தாலும், நாம் எல்லா நாடுகளுக்கும் எவ்வித பிரச்சினையும் இன்றி முட்டைகளை ஏற்றுமதி செய்யமுடியும். சத்துணவு முட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய கமிட்டி ஒன்றை அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சலசலப்பு
முன்னதாக வாட்ஸ்-அப் செய்தி அனுப்புவது தொடர்பாக பண்ணையாளர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதற்கு சில பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் எழுப்பியதால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story