பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ.6¾ கோடியில் அமைக்கப்பட்ட குகை வழிப்பாதை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ.6¾ கோடியில் அமைக்கப்பட்ட குகை வழிப்பாதையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூர் அருகேயுள்ள பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் ரூ.6 கோடியே 70 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட குகைவழிப்பாதை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு குகை வழிப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:-
கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்கு வரத்தை எளிமைபடுத்தும் பொருட்டு ரெயில்வே தண்டவாளங்களுக்கு கீழ்புறத்தில் குகைவழிப்பாதை அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.13 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கினார். அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டு பசுபதிபாளையம் குகைவழிப்பாதை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்
கரூர் நகர்புற பகுதிகளான ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி உற்பத்தி தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. அந்த பகுதிகளையும், வாங்கபாளையம், குளத்துப்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளையும் இணைக்கக்கூடிய வகையில் இந்த குகைவழிப்பாதை அமைந்திருக்கிறது.
மேலும், தேசிய நெடுஞ் சாலையினை அடைய விரும்பும் பயணிகள் இந்த குகை வழிப்பாதை வழியே செல்லும்போது, சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையினை அடைய முடியும். வர்த்தக ரீதியாக இங்கு உற்பத்தியாகும் பின்னலாடைகளை எளிதில் எடுத்துச்செல்லும் வகையில் இந்த பாதை அமையும். இதனால் கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
434 குளங்களில் தூர்வாரும் பணி
கரூர் ரெயில் நிலையம் முதல் புறவழிச்சாலை வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.21 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1½ ஆண்டுகால தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக 37 நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சாலை 40 அடி சாலையாக உருவாக்கப்படுகிறது.
கரூர் நகராட்சியில் கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, கே.வி.பி. நகர் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட 46 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரூ.15 கோடி நிதி உதவி வழங்கி அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் தினந்தோறும் மக்களுக்கு சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
மாவட்டத்தில் சுமார் 434 குளங்கள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஆனால், சிலர் குளங்களுக்கு சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டதாக நாடகமாடுகின்றனர். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, நகராட்சிகளின் சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் அசோக்குமார், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் திருவிகா, கரூர் மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், அ.தி.மு.க. கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், வடக்கு நகர செயலாளர் பாண்டியன், நகர அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், நெரூர் வடபாகம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story