ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புள்ளம்பாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்லக்குடி,
புள்ளம்பாடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், மருத்துவ மனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க ேவண்டும், பரிசோதனைக்கு வந்து செல்லும் கர்ப்பிணிகள், பொதுமக்கள் காத்திருக்க நிழற்குடை அல்லது காத்திருப்போர் அறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மதியழகன், ஜோசப்ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட முன்னாள் பொருளாளர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்து பேசினார். இதைத்தொடர்ந்து சங்க மாநில குழு உறுப்பினர் சந்திரபிரகாஷ், மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story