பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2019 4:00 AM IST (Updated: 25 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீடு கேட்டு மனு கொடுத்த கட்டிட தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் வீட்டுமனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

மேலும் 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 ஆக குறைப்பதை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும். அதன்மூலம் தொழிலாளர் களுக்கான வேலை மற்றும் சம்பள பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டிட தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.

அதேபோல் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் நாடு முழுவதும் கட்டிட தொழிலாளர் நலவாரியங்களில் இருக்கும் ரூ.40 ஆயிரம் கோடி நலநிதியை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story