நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது: அரசு பள்ளி ஆசிரியர் பலி
ஆத்தூர் அருகே நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40) இவர் ஊரான்டிவலசு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு செந்தில்குமார் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்று விட்டு, மல்லியக்கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
ஈச்சம்பட்டி என்ற இடத்தின் அருகே ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. அந்த லாரி நிற்பதை ஆசிரியர் செந்தில் குமார் கவனிக்கவில்லை. மேலும் அப்போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கண்இமைக்கும் நேரத்தில் செந்தில்குமார் வந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மல்லியக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த ஆசிரியர் செந்தில்குமாருக்கு, தேவி என்ற மனைவியும் ஹர்ஷித் (11) என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story