வானவில் : தண்ணீர் சுத்திகரிப்பான்


வானவில்  :  தண்ணீர் சுத்திகரிப்பான்
x
தினத்தந்தி 25 Sept 2019 12:44 PM IST (Updated: 25 Sept 2019 12:44 PM IST)
t-max-icont-min-icon

சீனாவின் ஜியோமி நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான எம்.ஐ. தற்போது நீர் சுத்திகரிப்பானை (வாட்டர் பியூரிபயர்) அறிமுகம் செய்துள்ளது. இந்த நீர் சுத்திகரிப்பான் டேங்க் எப்.டி.ஏ. அங்கீகாரம் பெற்ற பிளாஸ்டிக்கால் ஆன 7 லிட்டர் கொள்ளளவு கொண்டது. அடிக்கடி மின் தடை ஏற்படும் பகுதிகளையும் கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது. சமையலறையில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

தண்ணீர் சுத்திகரிப்பை பார்க்க முடியும். இதன் விலை சுமார் ரூ.12 ஆயிரமாகும். எம்.ஐ.காம், பிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் இது கிடைக்கும். இதில் உள்ள பில்டர் கேட்ரிஜஸ் விலை சுமார் ரூ.4 ஆயிரமாகும். இந்த பில்டரை எளிதில் மாற்றலாம். இதற்கு மெக்கானிக்கை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது. இதில் மூன்று அடுக்கு வடிகட்டிகள் உள்ளன. இதனால் தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் உள்ளிட்ட தனிமங்களையும் இது பிரித்து சுத்தமான தண்ணீரை அளிக்கும்.

இதில் உள்ள காட்டன் பில்டர் குளோரினை வடிகட்டிவிடும். இரண்டாவதாக உள்ள சவ்வூடு பரவல் பில்டர் நீரில் கரைந்துள்ள உலோகங்களை நீக்கி விடும். இதில் இரண்டு சென்சார்கள் உள்ளன. இது டேங்கில் செலுத்தப்படும் குடிநீரை கண்காணிக்கும். அடுத்த சென்சார் வடிகட்டப்பட்ட தண்ணீரின் தூய்மையை கண்காணிக்கும்.

இதில் புற ஊதாக் கதிர்களை வெளியிடும் விளக்கு உள்ளது. இது தண்ணீரை 99.9 சதவீத அளவுக்கு தூய்மைப்படுத்த உதவும். தண்ணீர் வடிகட்டப்பட்ட முழு விவரங்களும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும். இதற்கு எம்.ஐ. செயலி உதவும்.

Next Story