வானவில் : எம்.ஐ. டி.வி. அறிமுகம்


வானவில்  : எம்.ஐ. டி.வி. அறிமுகம்
x
தினத்தந்தி 25 Sept 2019 12:50 PM IST (Updated: 25 Sept 2019 12:50 PM IST)
t-max-icont-min-icon

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான எம்.ஐ. நிறுவனம் தற்போது டி.வி.க்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளது.

40 அங்குலம், 43 அங்குலம், 50 அங்குலம் ஆகிய அளவுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ. டி.வி.க்களுடன் தற்போது 65 அங்குல டி.வி.க்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் 43 அங்குலம் மற்றும் 50 அங்குல டி.வி.க்கள் 4 கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் 40 அங்குல டி.வி. புல் ஹெச்.டி. டி.வி.யாகும். அனைத்து டி.வி.யிலும் 20 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இவை டால்பி மற்றும் டி.டி.எஸ். இசை நேர்த்தியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டவை. இதில் பிரீமியம் ரகமான 65 அங்குல டி.வி. மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 4 கே ரெசல்யூஷனைக் கொண்டது.

இதில் 40 அங்குல டி.வி.யின் விலை ரூ.17,999. அடுத்ததாக 43 அங்குல மாடல் விலை ரூ.24,999. இதற்கு அடுத்தபடியாக வந்துள்ள 50 அங்குல மாடல் விலை ரூ.29,999. பிரீமியம் மாடலான 65 அங்குல டி.வி.யின் விலை ரூ.55,999.

Next Story