வானவில் : ஜியோமி ஏ.ஐ. ஸ்பீக்கர், வை-பை ரவுட்டர்


வானவில் : ஜியோமி ஏ.ஐ. ஸ்பீக்கர், வை-பை ரவுட்டர்
x
தினத்தந்தி 25 Sept 2019 1:19 PM IST (Updated: 25 Sept 2019 1:19 PM IST)
t-max-icont-min-icon

ஜியோமி நிறுவனம் இப்போது செயற்கை தொழில்நுட்பத்தில் செயல்படும் (ஏ.ஐ.) ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த மின்னணு சாதனங்களை தயாரித்து வரும் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இப்போது செயற்கை  தொழில்நுட்பத்தில் செயல்படும் (ஏ.ஐ.) ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் இசைத் துறையில் உள்ள தொழில்துறையினருக்காக ‘ஜியோ ஏ.ஐ. ஸ்பீக்கர் புரோ’ என்ற மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இவை தவிர வை-பை ரவுட்டரையும் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ஏ.ஐ. ஸ்பீக்கர்

இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்திலான வலை போன்ற வடிவமைப்பைக் கொண்டது. இதற்கு முன்பு இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்பீக்கரைப் போன்ற தோற்றம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நீள் செவ்வக வடிவத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேல்பகுதியில் சுவிட்சுகள் அடங்கிய கண்ட்ரோல் பேனல் உள்ளது. இதில் ஹை-பை ஆடியோ பிராசஸிங் சிப் உள்ளது. அத்துடன் 360 டிகிரி கோணத்தில் இசையை பரப்பும் திறன் கொண்டது.

இதில் டி.டி.எஸ். தரத்தில் இசையை கேட்க முடியும். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் சிறப்பம்சமே வீடுகளில் உள்ள பல ஸ்மார்ட் சாதனங்களை இந்த ஸ்பீக்கரின் மூலமாக கட்டுப்படுத்த முடியும் என்பதுதான். வீட்டில் உள்ள 5 ஸ்மார்ட் சாதனங்களை இது கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்று இந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த சாதனங்கள் அனைத்தையும் ஜியோமியின் புளூடூத் மெஷ் கேட் வே வாயிலாக இணைக்க முடியும். குறிப்பாக இதன் மூலம் புளூடூத் தட்பவெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் உணர் சென்சார் உள்ளது. அது பதிவு செய்துள்ள விவரத்தை பெற்று இந்த ஸ்பீக்கர் அளிக்கும். இதன் விலை சுமார் ரூ.2,700.

ஜியோ ஏ.ஐ. ஸ்பீக்கர் புரோ

இது கருப்பு நிறத்தில் கிடைப்பதே மிகப் பெரும் வித்தியாசமாகும். இதன் மேல்பகுதியில் சுவிட்சுகள் குறிப்பாக ஜியோமி ஐ.ஆர். ரிமோட் உள்ளது. இது வீட்டில் உள்ள பெருமளவிலான மின்னணு சாதனங்களை கட்டுப்படுத்த உதவும். இதன் விலை சுமார் ரூ.3,000.

ஜியோமி ஏ.சி. 2100 வை-பை ரவுட்டர்

ஜியோமியின் ஸ்மார்ட் வீடு கட்டமைப்புக்கு இது மிகவும் அவசியமானது. இதில் ஜிகாபைட் எதர்னெட் போர்ட் மற்றும் ஜிகாபைட் டியூயல் பேண்ட் வை-பை, 4 உயர் செயல் திறன் மிக்க ஆன்டெனா, 6 சேனல் சிக்னல் ஆம்ப்ளிபயர், டியூயல் கோர் சி.பி.யு. மற்றும் 128 எம்.பி. உள்ளட்டு நினைவக வசதி கொண்டது.

இதில் 2 வழி மற்றும் 4 வழி பவர் ஆம்ப்ளிபயர் உள்ளது. இதில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் சிப்ஸ் உள்ளது. இது 3 வழிகளில் காற்று உள் சென்று வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது விரைவில் சூடேறாது. இதன் விலை சுமார் ரூ.1600.

Next Story