வானவில் : சாம்சங் கேலக்ஸியின் எம்.30எஸ். மற்றும் எம்.10எஸ்.


வானவில்  : சாம்சங் கேலக்ஸியின் எம்.30எஸ். மற்றும் எம்.10எஸ்.
x
தினத்தந்தி 25 Sept 2019 1:23 PM IST (Updated: 25 Sept 2019 1:23 PM IST)
t-max-icont-min-icon

சாம்சங், கேலக்ஸி வரிசையில் 2 புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங், கேலக்ஸி வரிசையில் 2 புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவை கேலக்ஸி எம்.30எஸ். மற்றும் கேலக்ஸி எம்.10எஸ். என்ற பெயரில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே கேலக்ஸி எம் வரிசையில் எம்10, எம்20, எம்30 மற்றும் எம்40 என்ற மாடல் போன்கள் அறிமுகமாகிஉள்ளன.

தற்போது அறிமுகமாகியுள்ள கேலக்ஸி எம்.10எஸ் மாடல் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை ரூ.8,999. மற்றொரு மாடலான கேலக்ஸி எம்.30எஸ் மாடலில் இரண்டு வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளது. இதில் ஒரு மாடல் 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை ரூ.13,999. மற்றொரு வேரியன்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை ரூ.16,999 ஆகும்.

எம்.30எஸ் மாடலில் 6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் வீடியோ காட்சிகளை 29 மணி நேரமும், வாய்ஸ் கால்களை 49 மணி நேரமும், வெறும் இசையை 131 மணி நேரமும் கேட்டு மகிழ முடியும். மிகப் பெரிய அளவிலான பேட்டரி இருந்தபோதிலும் இதன் தடிமன் வெறும் 8.9 மி.மீ. மட்டுமே. இதன் எடை 188 கிராம். இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக டைப் சி 15 வாட் சார்ஜர் உள்ளது.

இதில் அமோலெட் திரை உள்ளது. 48 மெகா பிக்ஸெல் கேமரா இருப்பதால் படங்கள் வழக்கமான கேமராவுக்கு இணையாக இருக்கும். செல்பி படம் எடுப்பவர்களுக்காக முன்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமரா, இரட்டை சிம் வசதி உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதன் நினைவகத் திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஓபல் பிளாக், சபையர் புளூ, பேர்ல் ஒயிட் ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

கேலக்ஸி எம்.10எஸ் மாடலில் சூப்பர் அமோலெட் திரை உள்ளது. இதில் எக்ஸினோஸ் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியும் உள்ளது. 15 வாட் சார்ஜர் மற்றும் விரல் ரேகை உணர் சென்சாரையும் கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் வசதி உடையது. எல்.இ.டி. பிளாஷ் வசதியோடு 13 மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்டுள்ளது. இதிலும் இரட்டை சிம் உபயோகிக்கும் வசதி உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. ஸ்டோன் புளூ மற்றும் பியானோ பிளாக் உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கும்.

இவ்விரண்டு மாடலும் வருகிற 29-ம் தேதி அமேசான் நடத்தும் பிக் பில்லியன் விற்பனையின்போது ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story