கடன் தொல்லை: பெண் தற்கொலை
கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
வெள்ளமடம் அருகே திருப்பதிசாரம் சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஷகிலா (வயது 45). இவர் திருமண தகவல் மையத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு 1½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக ஷகிலா கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
ஷகிலாவுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஷகிலா தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவரின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஷகிலா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
விசாரணை
இதனையடுத்து உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story