படப்பை அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல்
படப்பை அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல் பேராட்டம் நடந்தது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூர் பழந்தண்டலம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எருமையூரில் இருந்து பழந்தண்டலம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சாலையை சீரமைக்கக்கோரியும், தாம்பரத்தில் இருந்து பழந்தண்டலம் வரை இயக்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்சை இயக்கக்கோரியும் எருமையூர் பழந்தண்டலம் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னி அரசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story