ஆறுகளில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்க வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை
ஆறுகளில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து அதிகமான உபரி நீர் திறந்து விடப் படுகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கூடுதலாக வர இருப்பதால் பொதுமக்கள் ஆறுகளில் பாதுகாப்பாக குளிக்கவும், குழந்தைகளை கண்டிப்பாக ஆறுகள் மற்றும் குளங்களில் குளிக்க அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story