திருவாரூரில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


திருவாரூரில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:15 AM IST (Updated: 26 Sept 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் இம்மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரும்பு சத்து, நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் கர்ப்பினி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இதன் மூலம் குழந்தைகளிடம் உடல் வளர்ச்சி குறைபாடு, குள்ளமாதல் பிரச்சினை மற்றும் எடை குறைவு பிரச்சினை வராமல் தடுக்கலாம். மேலும் உணவு உண்பதற்கு முன்பும், கழிப்பறை பயன்படுத்திய பின்னரும் நன்றாக கைக்கழுவ வேண்டும். அனைவரும் கழிப்பறை பயன்படுத்துவதை உறுதி செய்தல், பாதுகாப்பான குடிநீர்் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவைகைள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி

பேரணியானது புதிய ரெயில் நிலையத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள கலந்து கொண்டனர். முன்னதாக ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார். இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் திட்ட அலுவலர் ராஜம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல், தாசில்தார் நக்கீரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் வட்டார அலுவலர் புவனேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story