டிக்-டாக் செயலி மூலம் பழகிய தோழியுடன் தேவகோட்டை நர்சு சென்றது ஏன்? போலீசாரிடம் வாக்குமூலம்
டிக்-டாக் செயலி மூலம் பழகிய தோழியுடன் சென்றது ஏன்? என்பது தொடர்பாக தேவகோட்டை பகுதியை சேர்ந்த நர்சு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் வினிதா(வயது 20). இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானாஊருணியை சேர்ந்த ஆரோக்கியலியோ(வயது 25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. வினிதா நர்சாக பணியாற்றி வருகிறார்.
திருமணத்திற்கு பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் காளையார்கோவிலில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வினிதாவின் கணவர் ஆரோக்கியலியோ கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவரது மனைவி வினிதா மட்டும் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கும், திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுக்கும் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வினிதாவிற்கு தெரியாமல் அவருடைய கணவர் திடீரென்று சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பெற்றோர் வீட்டில் இருந்த வினிதா அவருடைய டிக்-டாக் தோழியுடன் திடீரென்று மாயமானதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரது கணவர் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிதாவை தேடி வந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் திடீரென சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். பின்னர் அவரை தேவகோட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது வினிதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
டிக்-டாக் செயலி மூலம் வினிதாவிற்கும், திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அபி திருவிழாக்களில் நடைபெறும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் நடனம் ஆடுபவர். டிக்-டாக்கில் இருந்த அவரது ஆடல்-பாடல் பதிவுகளை பார்த்த வினிதாவிற்கும் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வினிதா தனது கணவரை அழைத்துக்கொண்டு அபியின் நடன நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அப்போது அவரது கணவர் ஆரோக்கியலியோ, அந்த சந்திப்பை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். இதற்கிடையே ஆரோக்கியலியோ வெளிநாட்டிற்கு சென்றவுடன் வினிதா, அபியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரியவர அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து வினிதா வீட்டில் இருந்த அவரது சகோதரிக்கு சொந்தமான 20 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, தோழி அபியுடன் சென்றுள்ளார். போலீசார் தேடுவதை அறிந்ததும் வினிதா, சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அபியை அழைத்தும் விசாரணை நடத்த உள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story