மாவட்ட செய்திகள்

சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம் + "||" + Transfer of work for construction of minor bridges at Sirkazhi at Rs

சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்

சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்
சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி,

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மழை காலங்களில் அதிகளவு மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளும் சேதமடைந்தது. இதனால் மழை காலங்களில் எளிதாக மழைநீர் வடியும் வகையில் பிடாரி வடக்கு வீதியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறுபாலம் (பாக்ஸ் கல்வெர்ட்) கட்ட முடிவு செய்யப்பட்டது.


இதேபோல் சீர்காழி ஈசானியத்தெருவிலும் மழைநீர் விரைவாக வடியும் வகையில் சிறுபாலம் கட்டவும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இரு பாலங்களுக்கும் ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறுபாலங்கள் கட்டும் பணி

அதன்படி பிடாரி வடக்கு வீதியில் முதல் கட்டமாக சாலையின் குறுக்கே சிறுபாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக சாலையின் குறுக்கே பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டப்பட்டு, உடனடியாக கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு, பகலாக பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணி நடைபெறுவதால் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக புகார் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
2. வாகன நெரிசலை சமாளிக்க முக்கிய வீதிகளில் ஒருவழிப்பாதை போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்
வாகன நெரிசலை கட்டுப்படுத்த நகரின் சில வீதிகளை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
3. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்
பல்வேறு பெண்களுடன் காம களியாட்டத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
4. நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்
நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5. நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு கிராமமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடியில் நெல்கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.