வில்லியனூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம்


வில்லியனூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Sept 2019 3:30 AM IST (Updated: 26 Sept 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூரில் உள்ள 4 மாடவீதிகள், சாலைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளில் சிறு வியா பாரிகள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதையொட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. உழவர்கரை நகராட்சி பகுதி களிலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத் தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை கலெக்டர் சஷ்வத் சவுரவ் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது வில்லியனூர் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதன் பிறகும் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை கலெக்டர் சஷ்வத் சவுரவ் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை உழவர்கரை நகராட்சி சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் வில்லிய னூர் போலீசார் உதவியுடன் வில்லியனூர் 4 மாட வீதிகள், தெற்கு மாடவீதிகள் மற்றும் உழவர்கரை பகுதிகளுக்கு 2 பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர்.

அப்போது போக்குவரத் துக்கு இடையூறாக வைத்திருந்த விளம்பர பதாகைகள், சாலையை ஆக்கிரமித்து இருந்த பந்தல்களை பொக் லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளினர். இதனால் கடை களின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனை கண்ட மற்ற கடைகளின் உரிமை யாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனையடுத்து அந்த பகுதியில் சாலைகள் விரிவாக காணப்பட்டது.

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க அதிகாரி கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story