காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; வாலிபர் கைது


காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி நந்தி நகரை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார். மேலும் இவர் தர்மபுரியில் நடன பயிற்சிக்கும் சென்று வந்தார். அங்கு ஜருகு கிராமத்தை சேர்ந்த பிரதாப் (வயது 20) என்ற வாலிபர் மாணவிக்கு அறிமுகமானார். பிரதாப் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கல்லூரி முடிந்து மாணவி குமாரசாமிப்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு சென்ற பிரதாப், மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

Next Story