தேர்தல் விதிமுறை மீறல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரனிதி ஷிண்டே மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரனிதி ஷிண்டே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்ட சபைக்கு அடுத்த மாதம் (அக் டோபர்) 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதையடுத்து வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படு வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சோலாப் பூர் மாவட்டம் தாஜிபேத் வெங்கடேஷ் நகர் பகுதியில் 2 பெண்கள் வாக்காளர்களுக்கு அழகு சாதன பொருட்களை தேர்தல் நடத்தை விதி முறையை மீறி வினியோகித்துக் கொண்டிருந்தனர். அதில், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. பிரனிதி ஷிண்டேவின் புகைப்படமும், பெயரும் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து வந்த புகாரின்பேரில் தேர்தல் பறக்கும் படை போலீசார் அந்த 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சோலாப்பூர் சென்டிரல் தொகுதி பெண் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரனிதி ஷிண்டே மீதும் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
பிரனிதி ஷிண்டே, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story