இந்தியாவில் மூளை மழுங்கு நோயால் 44 லட்சம் பேர் பாதிப்பு விழிப்புணர்வு முகாமில் துறைத்தலைவர் தகவல்
இந்தியாவில் மூளை மழுங்கு நோயால் 44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக விழிப்புணர்வு முகாமில் துறைத்தலைவர் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை-கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி இணைந்து நேற்று மூளை மழுங்கு நோய்(அல்சைமர்) குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமிற்கு அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) அர்ஷிதா பேகம் தலைமை தாங்கினார். நரம்பியல் துறை டாக்டர் வேணி வரவேற்று பேசினார்.
முகாமில் மூளை நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் சாக்ரடீஸ் பேசியதாவது:-
44 லட்சம் பேர் பாதிப்பு
நாட்டில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் 3 மடங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மூளை மழுங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அல்சைமர் என்பது மூளையை தாக்கும் ஒரு நோய். அதன் காரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் பெரிய எண்ணிக்கையில் இறந்து விடும். ஆரம்ப நிலையில் அவர்களது நடத்தையில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். நினைவாற்றல், சிந்தனை மற்றும் நன்கு முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். சரியான பெயரை ஞாபகப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படும்.
சற்றுமுன் வாசித்த தகவலை மறந்து விடுதல் உள்ளிட்ட மாற்றம் ஏற்படும். அதுவே கடுமையான பாதிப்பு ஏற்படும்போது, நினைவாற்றலேயே இழந்து விடும் சூழல் ஏற்படும். இந்த நோயை தடுக்க முடியாது. ஆனால், முறையாக பாரமரித்தால் கட்டுப்படுத்திட முடியும். இந்தியாவில் இதுவரை மூளை மழுங்கு நோயால் 44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 30 ஆண்டுகள் கழித்து 1 கோடியை தாண்டும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முகாமில் அரசு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரன், உதவி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story