விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 17 பேர் இறந்த வழக்கு: இம்மாடி மகாதேவசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் இறந்த வழக்கில், இம்மாடி மகாதேவசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்திமாரம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு(2018) கோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட 17 பேர் அடுத்தடுத்து இறந்தனர். 100-க்கும் அதிகமானவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராமசமுத்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரியவந்தது. மேலும் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் விஷம் கலந்ததாக சாளூர் மடத்தின் இளைய மடாதிபதி இம்மாடி மகாதேவசாமி, அவருடைய கள்ளக்காதலி அம்பிகா, அம்பிகாவின் கணவர் மாதேஷ் மற்றும் தொட்டய்யா ஆகியோரை போலீசார் கைது செய்து மைசூரு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி 2 முறை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் இம்மாடி மகாதேவசாமி மனு செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த நிலையில் நேற்று இம்மாடி மகாதேவசாமியின் மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Tags :
Next Story