நெய்வேலியில், நான்கு வழிச்சாலை பணிக்காக ஆர்ச் கேட் இடித்து அகற்றம்
நெய்வேலியில் நான்கு வழிச்சாலை பணிக்காக என்.எல்.சி. ஆர்ச் கேட் இடித்து அகற்றப்பட்டது.
நெய்வேலி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலிருந்து பண்ருட்டி, வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை இருவழிச்சாலையாகவே இருந்து வருகிறது. இதில் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதில் பண்ருட்டி வரைக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டு சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நெய்வேலியையொட்டி உள்ள பகுதியில் சாலை விரிவாக்க பணி தொடங்கி இருக்கிறது. இதற்காக சாலையோரம் கடை வைத்து இருப்பவர்களுக்கு முன்அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதை, அடுத்து அவர்கள் காலி செய்து சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நேற்று என்.எல்.சி.யின் ஆர்ச் கேட் இடித்து அகற்றப்பட்டது. இந்த ஆர்ச் கேட் பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு மாற்றாக சற்று தொலையில் மாற்றொரு ஆர்ச் கேட் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் பணியில் இருப்பார்கள். சரக்கு வாகனங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெற்று தான் உள்ளே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story