பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் இணைப்பு


பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 26 Sept 2019 4:00 AM IST (Updated: 26 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை மறுநாள் முதல் படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் கொல்லம் சென்று அங்கிருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு பாலக்காடு செல்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை முன்பதிவு பெட்டிகள் இல்லாத ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இதில் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

இந்த ரெயிலில் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நான்கு இணைக்கப்பட உள்ளன. இதுதவிர 6 பொது பெட்டிகளும் உள்ளன. நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

இந்த தகவலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

Next Story