சென்னை, 7-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி


சென்னை, 7-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரத்தை பொருத்தும்போது தவறி விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலியானார்.

அடையாறு,

சென்னையை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 29). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 9 மாத குழந்தையும் உள்ளது.

ராஜசேகரன், நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக ஜன்னலுக்கு வெளிப்புறம் நின்று கொண்டிருந்த அவர், எதிர்பாராதவிதமாக கால் தவறி 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகரன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story