நாட்டு நலப்பணி திட்ட முகாம்


நாட்டு நலப்பணி திட்ட முகாம்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி கிராமத்தில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி கிராமத்தில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கோவில்களில் உழவாரப்பணி, பள்ளி வளாக தூய்மை பணி, மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விக்கிரமங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

இதேபோல் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஸ்ரீபுரந்தான் பள்ளி தலைமையாசிரியர் செல்வராசு தொடங்கி வைத்தார்.

Next Story