ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழிப்புணர்வு பிரசார இயக்கம் பெரம்பலூர் வந்தது


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழிப்புணர்வு பிரசார இயக்கம் பெரம்பலூர் வந்தது
x
தினத்தந்தி 26 Sep 2019 10:45 PM GMT (Updated: 26 Sep 2019 8:23 PM GMT)

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து புறப்பட்டது.

பெரம்பலூர்,

தேசிய புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது. தொடக்கக்கல்வி துறையை சீரழிக்கும் அரசாணைகளை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் தமிழகத்தில் 6 இடங்களில் இருந்து புறப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் வாகனம் மூலம் புறப்பட்ட விழிப்புணர்வு பிரசார இயக்கம் நேற்று மாலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு வந்தடைந்தது. அப்போது பிரசார இயக்கத்தை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அமைப்பாளர் சின்னசாமி வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் செல்வகுமார், தமிழ்நாடு மேல்நிலை உயர்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில், செயலாளர் ஹேமலதா, துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதையடுத்து அந்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் திருச்சிக்கு சென்றடைந்தது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கரூரில் பிரசார பயண நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Next Story